.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, December 31, 2017

வருடம் - 2017 - கவிதையாய்...

பொறுமை கொள்! மனமே ! பொறுமை கொள் !

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை

தினமணியில் படிக்க‌

Sunday, December 24, 2017

உங்கள் மணியான வாக்குகளை...

#கடி ஜோக்ஸ் - பாகம் - 78

மனசெல்லாம் பணமே !


"தேர்தல் பிரச்சாரத்தில அந்த கட்சிகாரங்க ஓட்டுக்கு பணம் கொடுக்கறோமுன்னு சூசகமா சொல்றாங்களாமே ! எப்படி?"

"உங்க  MONEY- யான வாக்குகளை   MONEY அண்ணனின்     MONEY சின்னத்திற்கே போடுங்க-ன்னு பேசறாங்களே !"

"!!!"

 



கச்சேரியும் காபி, டீயும்


"கச்சேரியில காபி ராகம் பாடும்போது காபி குடிப்பேன்னு சொல்றீங்க....என்ன பாடினா டீ குடிப்பீங்க?"

"தோடி..."

"தோ....டி...."

 


பிரபல எழுத்தாளர்?!

"அந்த எழுத்தாளர் வீடு முழுக்க ஏகப்பட்ட கேடயம் அடுக்கி வெச்சிருக்காரு ! "

" அப்படியா ! அவ்வளவு விருது வாங்கியிருக்காரு? எனக்குத் தெரியலையே !"

"அட நீங்க வேற ! எதுக்கும் லாயக்கில்லை-ன்னு அவங்க மனைவி வீசற பூரிக்கட்டையிலேர்ந்து தற்காப்பு-க்காக வாங்கி வெச்சிருக்கிற போர்க் கேடயத்தை சொன்னேன் !"

"!!!"

Thursday, December 21, 2017

மனத்திற்கிட்ட கட்டளை

பொறுமை கொள்! மனமே ! பொறுமை கொள் !

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை






தினமணியில் படிக்க‌

Saturday, December 9, 2017

போட்டு தாக்கிய தலைவர் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 77

வேட்பாளர் ஜாக்கிரதை !



"தேர்தலுக்கு வேட்பு மனு கொடுக்க போன இடத்துல நம்ம தலைவர், அங்க இருந்த அதிகாரியை காரணமே இல்லாம அடிச்சு தாக்கிட்டாராமே !"

"வேட்பு மனு தாக்கல் செய்யணும்-ங்கிறது தலைவர் தப்பா புரிஞ்சுகிட்டாராம் !"





சனிபெயர்ச்சி சின்னசாமி !


"நம்ம சின்னசாமிக்கு ஜோதிடத்தில நெறைய நம்பிக்கை இருக்கலாம்...அதுக்காக இப்படியா செய்வாரு?"

"அப்படி என்ன செஞ்சாரு?"

"டாக்டரோட சனி பெயர்ச்சி பலன் தெரிஞ்சுகிட்டு டாக்டருக்கு நல்ல பலன் இருந்தாதான் அவர்கிட்ட போவேன்னு அடம் பிடிக்கறாரே !"

"???"



வாயிலே வடை !

"வாயிலேயே வடை சுடற நம்ம தலைவரு, சுடச்சுட வடையை வாங்கி அப்படியே வாயில போட்டுகிட்டாரு...!"

"அய்யய்யோ...! என்ன ஆச்சு?"

"அதான் சொன்னேனே ! வாயிலே வடை சுட்டுடுச்சின்னு...!"

"???"

Saturday, November 25, 2017

சங்கீத சீசன் - சுருதி - ஞானம்

#கடி ஜோக்ஸ் - பாகம் - 76

சுருதி மேல‌ FOCUS



" சுருதி-ல லயிச்சு பாடறேன்-னு சொல்லி  அந்த வித்வான்  மேடையிலே ஆடியன்ஸ்-ச பாத்து உட்காராம, ஒரு பக்கமா திரும்பி தம்புரா போடறவங்கள பார்த்து உட்கார்ந்திருக்காரே ஏன்?"

"சுருதி-ன்னு அவர் சொன்னது தம்புரா வாசிக்கிற அந்த அம்மாவோட பேரை...!"

"????"

ஞானப் பழம் ப்ரேமா !

"நம்ம குருவிடம் பெண் சிஷ்யையாய் இருந்த ப்ரேமா-வுக்கு ஞானம் கிடைத்துவிட்டதாமே !"

"ஆமாம்...அவர் மற்றொரு சிஷ்யரான ஞானசம்பந்தத்தை கல்யாணம் செஞ்சுகிட்டாரே !"

"!!!!"

சீசன் டாக்டர் !



"அந்த GASTRO டாக்டர் என்ன சங்கீதகாரரா? சீசன்-ல அப்பாயிண்ட்மென்ட் இல்ல...ரொம்ப பிஸி-ன்னு சொல்றாரே !"

"அட நீங்க வேற ! சபா கேன்டீன்-ல சாப்பிட்டு வரும் பேஷண்ட் கூட்டம் அதிகமா இருக்கும்-ன்னு அப்படி சொல்றாரு !"

"!!!"

Monday, November 20, 2017

யாருமில்லாத‌ மேடையிலே !

யாருமில்லா மேடையிலே பாடுபவன் நம்பிக்கை போல்..

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை

Saturday, November 11, 2017

தலைவர் வீட்டு ரெய்டு !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 75

குப்பை ப்ளஸ் ப்ளஸ்!



"ஏற்கனவே நிறைய கிடந்த குப்பையை  ADD பண்ணி   MULTIPLY பண்ணின பிறகு அந்த இடமே சுத்தமாயிடுச்சு-ன்னு சொல்றாரே...! அது எப்படி? குப்பை அதிகமாகத் தானே ஆகும்?"

"அட நீங்க வேற...அந்த குப்பையை கூட்டி, பெருக்கி எடுத்ததான் அவர் அப்படி சொல்றாரு !"

"???"

தலைவர் வீட்டு ரெய்டு !



"வருமான‌ அதிகாரிகள் தலைவர் வீட்டுல கைப்பற்றியதா சொன்னத, தலைவர் ஒத்துகிட்டாரா? எப்படி?"

"ரெய்டு-க்கு எதிரா தலைவர் விட்ட அறிக்கையில...'அதிகாரிகள் 7 கிலோ தங்கம் சிக்கியதாகச் சொன்னார்கள். ஆனால் நான் வைத்திருந்தது ஏழரை கிலோ-ன்னு சொல்லிட்டாரே !"

"???"

ஸ்வீட் டாக்டர் !



"அந்த டாக்டருக்கு ஸ்வீட் போளி-ன்னு ரொம்ப புடிக்கும்...ஃபீசுக்கு பதிலா போளி கொடுத்தாலே போதும்-ன்னு சொல்வார்ன்னா பாத்துக்கங்களேன்...!"

"அப்போ போளி டாக்டர்-ன்னு சொல்லுங்க !"

"!!!"

Friday, November 3, 2017

வாட்ஸ்-அப்பில் வந்த மழை !

#மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள் ?
வாட்ஸ்-அப்-பில் வந்ததில் ரசித்தது: 

(சிவப்பு நிறத்தில் உள்ளவை நான் சேர்த்தது)இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது!

கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....

சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க !

நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது !

பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது !

போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது !

வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது !

ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது !

டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது  !

கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது !

மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது !

பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது!

===========================================================

எனது பங்களிப்பு : நான் சேர்த்தது...

டாஸ்மாக் கடைக்காரர்: பட்டைய கெளப்புது !

சிகை அலங்காரி: சும்மா பிண்ணி எடுக்குது !

ஸ்டிரிக்ட் டீச்சர்: சாத்து சாத்துன்னு சாத்துது !

தல ரசிகன்: தெறிச்சு விடுது !

கொள்ளைக்காரன்: பொத்துகிட்டு ஊத்துது  !


PETS LOVER: RAINING CATS and DOGS !
 ============================================================

மனைவி : செம அடி அடிக்குது !

கணவன் :  வாங்கு வாங்குன்னு வாங்குது !



Tuesday, October 31, 2017

தீ தின்ற உயிர் !

இது போன்ற கொடுமைகளுக்கு மௌனமே பதிலாய் கிடைக்குமோ? என்றுதான் முடிவு கிட்டும்?!

தினமணி - கவிதைமணியில் எனது கவிதை


Thursday, October 26, 2017

அஞ்சு வருஷத்தில முடி என்னாச்சு ?

#கடி ஜோக்ஸ் - பாகம் - 74

 மிதக்கும் பல் !



"நம்ம பாலு, பல்லு விழுந்தா அத ஒரு கப்-ல போட்டு தண்ணில மிதக்க விடறானே ! ஏன்?"

"அவன் கப்-பல் விடறானாம் !"

"????"


 

இங்கிலீஷ் வெஜிடபிள் ! 

 
"க்ளாசுக்கு புதுசா வந்திருக்கிற‌ ரகு ஒரு காய்கறி வியாபாரி பையன்-ன்னு எப்படி சொல்றீங்க?"

"ஒரு பெண் குச்சி இல்லாமல் கைகளாலேயே ட்ரம்ஸ் வாசித்தாள் -ங்கிறத இங்கிலீஷ்-ல சொல்லசொன்னா..
 LADIES FINGER DRUMSTICK -ன்னு சொல்றானே !"

"????"


 

எப்படி ஆயிட்டேன்? 

"அஞ்சு வருஷத்துக்கு முன்னாடிபார்த்ததுக்கும், இப்போ உங்கள பார்க்கறத்துக்கும் நெறைய மாறீட்டீங்க?"

"அப்படியா? அப்படி என்ன மாறிட்டேன் !"

"அப்போ...தலையில முடி நிறைய்யா இருந்தது. இப்போ நரையா முடி இருக்குதே !"

"!!!!"

Wednesday, October 18, 2017

தீபாவளி ஜோக்ஸ் !


#கடி ஜோக்ஸ் - பாகம் - 73 - 
தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !

நாய்கள் தீபாவளி தீர்மானம் !

"தீபாவளி பட்டாசு சத்தத்தில தெறிச்சு ஓடற நாய் எல்லாம் ஒண்ணா சேர்ந்து என்ன பேசுதுங்க?"


"நாய்ஸ்   POLLUTION பத்தி-தான்...!"

"!!!"



சுத்தி வரும் தீபாவளி ! 

"பஞ்சர் ஒட்டுற கடை வெச்சிருக்க பாபு தீபாவளிக்கு என்ன பட்டாசு வெச்சாரு?"

"சக்கரம் தான் ! (wheel)"


"!!!!"








தீபாவளி திருமகள் அல்லவா?

"கல்யாணமாகி 4 வருஷமாகியும் தீபாவளிக்கு இன்னும் அல்வா கூட பண்ணத் தெரியல-ன்னு சொல்லிகிட்டே இருந்த உங்க மாமியார் வாயை எப்படி இந்த வருஷம் அடைச்ச ?"


"நான் செஞ்ச அல்வாவை வெச்சுதான் !"


"???"



Friday, October 13, 2017

இக்கட சுடு ! - பலகாரம் சுடு ! கேப்பு சுடு !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 72



வேட்டை மன்னன் !

"என்ன சொல்கிறீர்கள்? தீபாவளியும் அதுவுமா மன்னர் வேட்டைக்கு சென்றுவிட்டாரா? அவரது வீர உணர்ச்சிக்கு எல்லையே இல்லையா?"

"அட நீங்க வேற ! அவரு வேட்டைக்கு போனது காட்டுக்கு இல்லை. பலகாரம் அடுக்கி வெச்ச இடத்துக்கு !"


"????"






ஷேக் மன்னன் !


"பொம்மை துப்பாக்கி கையில் பிடித்து வெடிப்பதற்கே மன்னரின் கை இப்படி நடுங்குகிறேதே ! ஏன்?"

"எதிரில் ராணியார் நிற்கிறாரே...! "


"!!!!"



சுடு மன்னன் !


"எங்கள் நாட்டு மன்னர் பலகாரம் சுடுவதில் கில்லாடி. இனிப்புகள் எல்லாம் அருமையாய் தானே செய்வார் !"


"எங்கள் நாட்டு மன்னரும் சூப்பராய்  பலகாரம் சுடுவார் !"


"அப்படியா..ஓ...! நன்றாகச் செய்வாரா?"


"ராணிக்குத் தெரியாமல் பலகார அறைக்கு சென்று, சுட்டு வைத்த பலகாரத்தை சுட்டுகிட்டு வந்திடுவார் ! அதைச் சொன்னேன்..!"

Friday, October 6, 2017

கொசுக் கடி தாங்க முடியல !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 71



'பஸ்கிட்டோ !'

“கொசுத் தொல்லைக்கு ஆம்னி பஸ்கள்தான் காரணம்ன்னு அமைச்சர் சொல்றாரே!”

“அப்படியா? அது சொகுசு பேருந்து இல்ல...சொ கொசு பேருந்துன்னு சொல்லுங்க...!”

"!!!"


கொசுமின்ட்டன் !


“அந்த ப்ளேயர் பாட்மின்ட்டன் சாம்ப்பியனா ஆனதுக்கு அவங்க ஏரியால இருந்த கொசுக்கள்தான் காரணம்ன்னு சொல்றாரே!”

“ சின்ன வயசிலேயே கொசு விரட்ட கொசு BAT பயன்படுத்திதான் அவர் ப்ராக்டிஸ் பண்ணிணாராம்!”

“???”

தலைவர் பேரு அப்படி !

“தலைவரே ! கொ. சுகுமார் ங்கிற பேரை கொ சு ன்னு சுருக்காதீங்கன்னு சொன்னேனே கேட்டீங்களா?”

“இப்ப என்ன ஆச்சு?”

“ஊர்ல டெங்கு காய்ச்சல் வந்ததுக்கு நீங்கதான் காரணம்ன்னு சொல்லி ஊர விட்டே விரட்டப்போறாங்களாம்!”

“!!!”
தமிழ்மணம் வாக்களிக்க...

Friday, September 29, 2017

கோள் மூட்டி இப்ப என்ன செய்யறான்?

#கடி ஜோக்ஸ் - பாகம் - 70

வந்தாள் மஹாலட்சுமி !



"நவராத்திரியும் அதுவுமா,  வீட்டுல் 'வந்தாள் மஹாலட்சுமி'யே-ன்னு பாட்டு பாடின புருஷன்கிட்ட ஏன் சண்டை போட்ட?"


"பூ கொடுக்க வீட்டுக்கு பூக்காரி லட்சுமி வந்தப்போ-தானே அவர் அப்படி பாடினாரு !"

"???"

கோள் மூட்டி


"சின்ன வயசில எல்லாரையும் பத்தி டீச்சர்-கிட்ட கோள் மூட்டி விட்டுகிட்டே இருப்பானே ! அவன் இப்போ என்ன பண்றான்?"

"கோள் ஆராய்ச்சி விஞ்ஞானியா இருக்கான்...!"

"!!!!"


கறிக்கடை 


"என்னங்க கறி கடைக்கு போய் ஏதாவது வாங்கிட்டு வாங்க-ன்னு சொன்னா...ப்ரெட்-டும், பட்டர் பிஸ்கெட்டும் வாங்கிட்டு வந்திருக்கீங்க?"

"நான் போன கறிகடை-யில இதான் கிடைச்சது!"

"அப்படி எந்த கடைக்கு போனீங்க?"

"பேக்கரி..!"

Saturday, September 23, 2017

கணவனும் மனைவியும் விளையாட்டு வீரரானால்...

#கடி ஜோக்ஸ் - பாகம் - 69
 
தூங்கிச் செல் !


"நீ புதுசா செல்போன் வாங்கி யூஸ் பண்ணாம அப்படியே தூங்க வெச்சிருக்கியா? ஏன்டா?"

"ஏன்னா...அது சாதாரண செல் இல்ல...ஸ்லீப்பர் செல்...!"

"!!!!"




கபடி...காலைப் புடி..


"நீதான் Football  ப்ளேயர் ஆச்சே ! உன்  தெறம‌ எல்லாம் பயன்படுத்த வேண்டியது தானே ! அப்படியும் ஏன் மனைவிகிட்ட அடிவாங்கற?"

"அவ கபடி ப்ளேயராச்சே !"

"???"


தொபகடீர்-ன்னு..!




"அந்த நடிகர் நேத்திக்குத்தான புதுக் கட்சி தொடங்கினார்...இன்னிக்கு கால்ல அடிபட்டு நொண்டிகிட்டு வர்றாரே !"

"அவர் அரசியல்ல குதிச்சாரே ! அதான்...!"

தமிழ்மணம் வாக்களிக்க...

Monday, September 18, 2017

ஜிமிக்கி கம்மலும் ஆட்டமும் !

#கடி ஜோக்ஸ் - பாகம் - 68



"இந்த ஜிமிக்கி கம்மல் பாட்டு வந்தாலும் வந்துது...வீட்டுல என் சம்சாரம் போட்டு பிண்ணி எடுக்குறா!"

"ஏங்க அவங்களும் டான்ஸ் ஆடுவாங்களா? நல்லதுதானே ?"

"அட நீங்க வேற ! எப்பவோ அவளுக்கு ஜிமிக்கி வாங்கித் தரேன்-ன்னு சொன்னது இப்போ ஞாபகம் வந்திடிச்சாம்...அத சொல்லிக் காட்டி பிண்ணி எடுக்குறா...!‍"

"???"
#ஜிமிக்கி கம்மல்# ################################################



"மூணு தலைமுறையா அவங்க வீட்டுல புல்லட் மட்டுந்தான் வாங்கறாங்க சரி...அதுக்காக மூணையும் இப்படி ஒன்னு பின்னாடி ஒன்னா கயித்தகட்டி ஏன் போறாங்க?"

"அவங்கதான் நாட்டிலேயே முதன்முதலா புல்லட் ட்ரெயின் விடறாங்களாம் !"

"???"
#bullet train ################################################


"நம் மன்னரை விருந்துக்கு அழைத்து தன் அரண்மனையை சுற்றி காண்பித்த அண்டை நாட்டு மன்னன் கடைசியில் 'அப்செட்' ஆயிட்டாராமே ! அப்படி நம்ம மன்னர் என்ன கேட்டார்?"

"அந்தப்புரம் எந்தப் புறம்-ன்னு கேட்டாராம்...!"

"!!!"

Saturday, September 16, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 67


இது புது மாடல் !




"சாப்பாட்டக் கொறச்சுக்கோ ! நொறுக்குத் தீனி தின்னாதன்னு சொன்னா கேட்கிறாயா? இதுல மாடல் ஆகணும்-ன்னு ஆசை வேற? எப்படி முடியும்?"

"எனக்கு ப்ளஸ் சைஸ் மாடல் ஆகணும்-ன்னு ஆசை...!"

"???"

 
வீட்டுக் க்ளீனர்





"வீட்டோட மாப்பிள்ளை இருக்கிறதுனால...தினம் வீட்ட துடைச்சு சுத்தம் செய்யறேன்னு சொல்றீங்களே? தினம் யார் செய்வாங்க அந்த வேலைய?"

"MOP - பிள்ளைதான் !"

 

சிம்பாளிக்கா சொல்றாங்களாம் !



 

"உங்களத் திருடன் புடிச்சு மிரட்டினப்போ...ஆ...ஆ-ன்னு கரெக்டா பத்து தடவ கத்தினீங்களாமே ! ஏன்?"

"ஆ பத்து-ன்னு மத்தவங்களுக்கு சொல்றதுக்குத்தான்...!"

Thursday, September 14, 2017

சேர்த்து வைத்த கனவு !

பெற்றோர்கள், தன்னால் நினைவாக்க முடியாத கனவுகளை, தன் பிள்ளைகள் மூலம் நினைவாக்க முயற்சி செய்வர்...!



Shared from:
Dinamani


Saturday, September 9, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 66


மேயர் மார்த்தாண்டம் !



"உங்க பையன் இந்த ஊர் மேயரா? அப்படின்னா நீங்க ரொம்ப செல்வாக்கான ஆளு-ன்னு சொல்லுங்க !"

"அட நீங்க வேற...ஒழுங்கா படிக்கவும் படிக்காம, வேலைக்கும் போகாம, ஊர் மேய்ஞ்சிகிட்டிருக்கான். அதனாலே, தன்னை  'ஊர் மேயர்'-ன்னு தானே சொல்லிகிடுத் திரியறான் !"

"!!!"



DISCOUNT OFFER




"நம்ம கம்பெனி வரவு செலவு கணக்கு பார்க்கிறவரு கூட தன்னோட fees-ல‌ 'ஆடி' மாச டிஸ்கௌண்ட் கொடுக்கறாராமே !"

"அவர் 'ஆடி'-ட்டர் ஆச்சே !"

"???"


ஸ்பெஷல் டே !
 
 

"இன்னிக்கு என்னங்க ஸ்பெஷல்? ஃப்ரைட் ரைஸ், ஃப்ரைட் சிக்கன், ஃப்ரஞ்ச் ஃப்ரைஸ் -ன்னு எல்லாம்  ஃப்ரைட் அயிட்டம்ஸ்?"

இன்னிக்கு FRI DAY ஆச்சே !

Wednesday, September 6, 2017

தலைப்பு 1: மனம் ஒரு குரங்கு ! தலைப்பு 2: வாழ்வும் சாவும் !

​இரு தலைப்பு - ஒரு கவிதை ?!....#Bluewhale

"அருகிலே உள்ள‌
அண்ணாச்சி கடைசென்று
அரைகிலோ அரிசி வாங்கி வா !"
அம்மா சொன்னது 
அவன் காதில் விழவில்லை !
அலைபேசியில்
அயராது ஆழ்ந்திருந்தான்...!
அரைமணி கழித்து
'என்னாச்சு? அரிசி' என்றால்..
'எப்போ சொன்ன' என்கின்றான் !

அன்னை சொல்கின்ற‌
சிறு வேலை செய்யாமல்
அன்றாட சோத்திற்கு
வழியேதும் செய்யாமல்...
எவனோ சொல்கின்ற
'டாஸ்க்'(TASK) எல்லாம் செய்கின்றான் !
தன்னை தன்கையால்
மாய்த்திடும் நாள் குறித்து....!




Monday, September 4, 2017

Saturday, September 2, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 65


சாப்பிட்டு நேரா வாங்க !



"தன்னோட ஒரு பையனுக்கு ஹோட்டலும், இன்னொரு பையனுக்கு ஹோட்டல் பக்கத்திலேயே ஒரு மருந்து கடையும் வெச்சு கொடுத்த நம்ம ராமசாமி புத்திசாலி !"

"எப்படி சொல்றீங்க?"

"ஹோட்டலேர்ந்து வெளியில வந்தா நேராக் கண்ணுல படுற மாதிரி "இங்கு வயிற்று வலி மருந்து கிடைக்கும்'ன்னு போர்டு வெச்சிருக்காரே !"

"!!!"


CATCH THE POINT

"பவுண்டரி அருகில் நின்றிருந்த FIELDER எதிரணி பேட்ஸ்மேன் கொடுத்த ரெண்டு கேட்ச்சை தவறவிட்டார் என்பதற்காக அவர் மீது 'தண்ணீர் பாட்டில்' வீசி எறிந்தாயா?"

"இல்லைங்க...! அவருக்கு உதவி பண்ண‌ காட்ச்- ப்ராக்டிஸ் கொடுத்தேன்...அவரு அதையும் புடிக்கல...!"

"???"

முள்ளு முள்ளு சலூன் !


"அந்த சலூன்-ல எல்லார்க்கும் முள்ளு, முள்ளாய் முடி வெட்டி விடறாங்களாமே ! ஏன்?"

"அது ரோஜா சலூன் ஆச்சே !"

"!!!"


தமிழ்மணம் வாக்களிக்க...

Saturday, August 26, 2017

கடி ஜோக்ஸ் - பாகம் - 64


ஆடு வாங்கி வந்தேன் !
"வீட்டுல ஆடு வளர்க்கலாம்-ன்னு ஆடு வாங்கிட்டு வரச்சொன்னா என்னங்க மூணு ஆடு வாங்கிட்டு வந்திருக்கீங்க? நாலா வாங்கணும்...இல்ல ரெண்டு வாங்கியிருக்கலாம்..."

"என்னாச்சு...மூணு வாங்கினா என்ன?"

"ODD - ஆ இருக்குதில்ல...!"


வில்லாதி வில்லன் !


"வில் வித்தையில் சிறந்தவனான அண்டை நாட்டு மன்னன் நம் மன்னனை நாளைக்கு போருக்கு அழைத்திருக்கிறான்."

"நம் மன்னர் அதற்காக இன்று ரெடி-யாகிக் கொண்டிருக்கிறாரா?"

"ஆமாம்.....இப்போதே WILL எழுதிக் கொண்டிருக்கிறார்...!"


சொந்த அனுபவமா?

"நம்மோட அனுபவங்கள்தான் நமக்குப் பாடமா இருக்கனும்-ன்னு இல்லை...அடுத்தவங்க அனுபவத்திலேர்ந்தும் நாம தெரிஞ்சக்கலாம்-ன்னு சொன்னா அதுக்கு அந்த எழுத்தாளர் ஏகாம்பரம் தான் நல்ல உதாரணம்..."

"ஏன் அப்படி சொல்ற?"

"கல்யாணம் பண்ணிக்காமலேயே மனைவி (கணவனை மிரட்டும்) ஜோக்ஸ் எழுதறாரே !"



தமிழ்மணம் வாக்களிக்க...

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates