.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Friday, July 29, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 7

இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்து, மனோ, முத்துவின் தந்தை, சிவா
-----------------------------------
மு.தந்தை: டேய் முத்து ! (கெஞ்சலாக) இதோ பாரு ! முத்து, குளிக்கப் போறான், முத்து குளிக்கப் போறான்-ன்னு நீ என்னவோ கடல்ல இறங்கி முத்து குளிக்கப் போற மாதிரி, நீ குளிக்கறதைப் பார்க்க உங்க சாரு, உன் நண்பன் சிவா, அவனோட அப்பா எல்லாரும் வந்திருக்காங்க...! அவங்களுக்காவது இன்னிக்கு ஒரு நாள் குளிடா...! ப்ளீஸ்...!

முத்து: மாட்டேன்-பா !

மனோ: சார் ! நீங்க இருங்க...! நான் சொல்லி பார்க்கிறேன்...! இதோ பாரு முத்து...! இதுபோல நாலு அஞ்சு நாளா குளிக்காம இருந்தா உடம்புல அரிப்பு, சொறி எல்லாம் வந்து துர் நாற்றம் வரும்...! நீ நல்ல பையனாச்சே ! போ...! போய் குளி...!

மு.தந்தை: என்னடா...சார்-எல்லாம் இருக்காங்க-ன்னு வெட்கப்படறியா?

முத்து: ஆமாம்பா !

சி.தந்தை: வா ! மனோ...! நம்ம போகலாம்...அவனுக்கு ஷை-யா இருக்கு போல...!

(அனைவரும் வெளியேறுகின்றனர்)

மு.தந்தை:: முத்து...! குளிக்கிறியா? முடிஞ்சா குளி..! சரியா...!

முத்து: அப்பா ! நான் உங்ககிட்ட உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்திடிச்சு !

மு.தந்தை: உண்மையா? என்னடா அது...? சொல்லு...சொல்லு...!

முத்து: அப்பா ! ஒரு அஞ்சு நாள் முன்னாடி நான் ஒரு ஜோசியக்காரனைப் பார்த்தேன்...! அவன் சொன்னபடி எனக்கு தண்ணியிலதான் கண்டமாம்...

மு.தந்தை: அப்படியா?

முத்து: அன்னிலேர்ந்துதான் என்பேரு-ல கூட "ஜலம்" இருக்கக்கூடாது-ன்னு, என் பேரை முத்து-ன்னு மாத்திகிட்டேன்...!தாகத்துக்கு இப்போ நான் தண்ணி கூட குடிக்கிறது இல்ல..பன்னீர் சோடாதான் குடிக்கிறேன்...!

மு.தந்தை: அதுக்காக, இந்த வெயில் காலத்துல குளிக்காம இருக்க முடியுமா?

முத்து: என்னப்பா செய்யறது? நான் உயிரோட...

மு.தந்தை:(குறுக்கிட்டு) வேண்டாம்-பா - அத மட்டும் சொல்லாத...நீ நல்லாயிருக்கணும்..அது போதும்... நீ குளிக்கவே வேணாம்...இங்கே வந்துடுப்பா !

(தொடரும்)

Monday, July 25, 2016

( கபாலி ) கடி ஜோக்ஸ் - பாகம் - 26

டேய் கபாலி ! வேலை தேடி இன்டர்வ்யூக்குப் போனியே...! என்னாச்சுடா?

"உன் பேர் என்னன்னு கேட்டாங்க...பேரைச் சொன்னேன்...வெளிய அனுப்பிட்டாங்க...!"

"அப்படி என்னடா சொன்ன?"

"கபாலி-டா..........! ந்னு சொன்னேன், "டா" போட்டு பேசறேன்-னு அனுப்பிட்டாங்க..!"

--------------------


"ஏட்டையா ! ரிலீஸ் ஆகிப்போன கபாலி, மூணு மணி நேரத்துக்குள்ள வேறு ஒரு கேஸ்-ல உள்ள வந்துட்டானே ! என்ன செஞ்சான்? ஏதாச்சும் சொன்னானா?"

"திரும்பி வந்துட்டேன்-னு சொல்லு...ன்னு சொன்னான்..!"

----------------------------------------------


கபாலி ...! நீ கத்தியால குத்தின கந்தசாமி ஆஸ்பத்திரியிலே சீரியஸா இருக்காராம்..!"

"மகிழ்ச்சி....!"

"??????????????????"
===========================================================

பக்கத்து வீட்டு கொள்ளைப் பக்கம் தீப்பிடிச்சிருக்கு-ன்னு ஃபயர் சர்வீசுக்கு சொன்னியா?"

சொன்னேன்...ஆனா வரமாட்டாங்களாம்.."

"அப்படி என்னடா சொன்ன?"

"நெருப்புடா-ன்னு சொன்னேன்...பாட்டு பாடறேன்-னு நெனச்சுகிட்டாங்க போல..."



Saturday, July 16, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 6

காட்சி - 6

இடம்: முத்துவின் வீடு
பாத்திரங்கள்: முத்துவின் தந்தை, சிவாவின் தந்தை, மனோ
-----------------------------------------------------------------------------------------------------

குரல்: முத்து...முத்து...(டக்...டக்.. - கதவு தட்டும் சத்தம்...)

முத்துவின் தந்தை: யாரு? முத்து இல்லையே ! நீங்க யாரு?

மனோ: நான் முத்து படிக்கிற ஸ்கூல்ல டீச்சர்...

மு. தந்தை: ஓ ! அப்படியா...வாங்க...!

சிவாவின் தந்தை: நான் முத்துவோட நண்பன் சிவாவோட அப்பா...!

மு.தந்தை: ஓ ! அப்படியா..! வாங்க...! உட்காருங்க...!என்ன விஷயம்?

மனோ: சார் ! முத்து எங்க போயிருக்கான்?

மு.தந்தை: அவன் எங்கயோ வெளியில போயிருக்கான் சார் !

மனோ: என்ன சார் இது...பையன் காலையில எழுந்து எங்க போறான், என்ன செய்யறான்-னு கவனம் வெச்சுகிறது இல்லையா?

மு.தந்தை: இவனைப் பத்தி எனக்கு இந்த விஷயத்தில கவலை இல்லை சார் ! அவன் ஒரு வெகுளி ! ரொம்ப நல்ல பையன்...!

மனோ: அவன் "வெகுளி"-ன்னு எனக்கும் தெரியும் சார்...அதுக்காக அவனை வெயில் காலத்துல கூட குளி-ன்னு சொல்ல மாட்டீங்களா?

மு.தந்தை: ஓ ! அங்க வர்றீங்களா ! நான் எவ்ளவோ சொல்லி பாத்துட்டேன் சார் ! அவன் கேட்கமாட்டேங்கிறான்...!
எனக்கு ஒரே புள்ள...ரொம்ப செல்லம்..அவனுக்கு ஏதாவது ஒண்ணுன்னா...(உணர்ச்சி வயப்படுகிறார்)

மனோ: ஹலோ..ஹலோ...சார் ! இருங்க..!ரிலாக்ஸ் ! இன்னிக்கு நாட்டுல வளர்ற தீவிரவாத போக்குக்கு இதமாதிரியான பேரண்டிங்கும் ஒரு காரணம்-ன்னு சொல்லுவேன் ...! ஒரே புள்ள..ஒரே பொண்ணு...ன்னு ஆளுக்கு ஒரு காரணம் சொல்லி பசங்களுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் கொடுத்து வளர்க்கிறதுனாலதான், அவங்க தன் இஷ்டத்துக்கு என்னன்னவோ பண்ணி தீவிரவாதியா கூட மாறிடறாங்க...!

மு..தந்தை: சார் ! என்ன சார் இது...! பையன் ஏன் குளிக்க-லன்னு கேட்கலைன்னா தீவிரவாதி ஆயிடுவான்னு புது தியரி சொல்றீங்க?

மனோ: சார் ! உங்க பையன் தீவிரவாதி ஆயிடுவான்னு நான் சாபம் எல்லாம் கொடுக்கல..அவன் நல்லவனா வரணும்ன்னும் ஆசிர்வாதம் கொடுக்கிறேன் ! நீங்களும் கொஞ்சம் பொறுப்பான அப்பாவா நடந்துக்கங்க...!

மு.தந்தை: உங்க ஆசிக்கும், கரிசனத்துக்கும் ரொம்ப நன்றி சார்...! நாளைக்கு காலையில அவன..நானே...அமுக்கி உட்காரவெச்சு குளிக்க வெச்சிடறேன்...நீங்க என்ன சாப்பிடறீங்க?

மனோ: எதுவும் வேணாம் சார்...அப்ப..நாங்க கிளம்பறோம்...நாளைக்கு காலையில வருவேன் சார்...உங்க பையன் குளிச்சிட்டானான்னு செக் பண்ணுவேன்...

மு.தந்தை: சரி சார் ! கண்டிப்பா வாங்க...!

(தொடரும்...)


Saturday, July 9, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 5

காட்சி - 5
இடம்: சிவாவின் வீடு
பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை, மனோகரன்
------------------------------------------------------------------------------------------------
தந்தை: என்னடா சிவா...! இப்படி மூச்சிறைக்க ஓடி வர்ற? என்னாச்சு?

சிவா: அப்பா ! அப்பா ! நம்ம வீட்டுக்கு சி.எம். வர்றாரு...!

தந்தை: chief minister எதுக்குடா நம்ம வீட்டுக்கு வரணும்?

சிவா: அப்பா ! CM-ன்னு நான் சொன்னது, எங்க ஸ்கூல் சாரு...மனோகரன் சாரு..

தந்தை: ஓ ! அவனா..! வரட்டும் ! வரட்டும் !

சிவா: என்னப்பா இது? சாரை போயி அவன் இவன்னு சொல்ற?

தந்தை: அவன் உனக்குதான்டா சாரு ! எனக்கு friend...நாங்க ரெண்டு பேரும் டிகிரி வரைக்கும் ஒண்ணா படிச்சவங்க..!

சிவா: அப்பா..! சார் வந்தாச்சு ...!

தந்தை: வாடா மனோ ! வா ! என்ன திடீர்ன்னு இந்த பக்கம்?  எப்படி இருக்க?

மனோ: ஒண்ணுமில்லடா..! இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்...அப்படியா பார்த்துட்டு போகலாமுன்னுதான்...

தந்தை: நல்லது..என்ன சாப்பிடற?

மனோ: குடிக்க ஜில்-லுனு தண்ணி மட்டும் குடு...!

தந்தை: சிவா ! சாருக்கு தண்ணி கொடுப்பா !  அப்புறம் என்ன...வீட்டுல எல்லாம் சௌக்கியம்தான..?

(சிவா தண்ணீருடன் வருகிறான்)

சிவா: சார் ! வாட்டர்...

மனோ: தாங்க்ஸ்...ம்...சிவா கொடுத்தது செம ஐஸ்...! (சிரிக்கிறார்) சரி சிவா..! லீவெல்லாம் எப்படி போகுது? useful-ஆ ஏதாச்சும் செஞ்சியா?

சிவா: லீவு ஜாலியா போகுது சார் !

மனோ: உன்னோட close friend ஒருத்தன் இருப்பானே ! அவன் பேரு என்ன? ம்...அருணாச்சலம்...அவன் என்ன செய்யறான்?

சிவா: சார் ! அவன் பேரு இப்போ அருணாசலம் இல்ல..முத்து...

மனோ: அவனே பேரை மாத்திகிட்டானா? ஏன்?

சிவா: தெரியல சார்...!

தந்தை: மனோ ! அந்தப் பய முழுகாம இருக்கிற சேதி தெரியுமா உனக்கு?

மனோ: என்னடா ஜோக் அடிக்கிற?

சிவா: சார் .. அவன் குளிச்சு 4 நாள் ஆவுது...அதான் அப்பா சொல்றாங்க...

மனோ: ஏன் ? என்னாச்சு? அவங்க வீட்டுல தண்ணி கஷ்டமா?

தந்தை: தண்ணி கஷ்டமெல்லாம் இல்ல...அவனுக்கு இஷ்டம் இல்ல அவ்ளோதான்..

மனோ: என்ன சொல்ற நீ?

தந்தை: அது என்னவோ தெரியலடா..! குளிச்சா தான் செத்து போயிடுவோம்-னு சொல்லிகிட்டுத் திரியறான் அவன்...

மனோ: அப்படியா...அவன் நல்ல பையனாச்சே..! வெகுளிப் பையன்...

தந்தை: எனக்கு என்னவோ அவன் வெகுளி இல்ல..ஒரு பித்துக்குளின்னு தோணுது...! (சிரிக்கிறார்)

மனோ: சரி...என்னோட கொஞ்சம் வர்றியா இப்ப?

தந்தை: எங்கடா மனோ?

மனோ: அந்த முத்து வீட்டுக்குப் போகலாம்...

தந்தை: ஓ ! போலாமே ! சிவா...! வீட்டைப் பார்த்துக்கோப்பா...! நான் மனோவோட போயிட்டு வர்றேன்...

(தொடரும்...)

Sunday, July 3, 2016

முத்து, குளிக்கப் போறான் ! - நாடகம் - காட்சி - 3 & 4

காட்சி - 3

பாத்திரங்கள்: சிவா, அவன் தந்தை
-------------------------------------------------------------------------------------------------------
சிவா: அப்பா ! அந்த முத்து ரொம்ப மோசம்பா !

தந்தை: ஏன்டா ! என்னடா செஞ்சான் அவன்?

சிவா: அவன் குளிக்கவே மாட்டேன்-ங்கிறாம்பா ! குளிச்சு 4 நாள் ஆவுது..

தந்தை: ஐயய...இது என்னடா கதை? எப்படிடா இந்த புழுக்கத்திலயும்...

சிவா: அப்பா ! அவன் ஒரு வெகுளி ப்பா ! அவன எப்படியாவது திருத்தணும்பா ! அவன், குளிச்சா தன்னோட உயிர் போயிடும்-னு நினைக்கிறான்-பா...அது ஏம்பா?

தந்தை: அவன் எதையும் சீக்கிரமா நம்பிடற ஆளுடா...! எவனாவது அவன்கிட்ட, "நீ குளிச்சா உயிர் போயிடும்-"ன்னு விளையாட்டா சொல்லியிருப்பான்...சரி...சரி...நாம என்ன செய்யலாமுன்னு பார்க்கலாம்...இப்ப போயி வேலைய பாரு...

சிவா: சரிப்பா !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காட்சி - 4

பாத்திரங்கள்: முத்து, அவன் தந்தை
இடம்: முத்துவின் வீடு
-------------------------------------------------------------------------------------------------------


தந்தை: முத்து ! முத்து ! இருடா  கொஞ்ச நேரம் ! இதோ பூசைய முடிச்சிட்டு வர்ரேன்...! அதுக்குள்ள கிளம்பிட்டயா?

(பூசையிலிருந்து வெளியே வந்து)

தந்தை: முத்து...இங்க பாருடா...! இன்னிக்கு வேலைக்காரி வரல..நீ பாட்டுக்கு ட்ரெஸ்-ஸ கழட்டிபோட்டுட்டு போயிடாதே ! கையோட தோச்சிட்டு வா !

முத்து: இப்பவே சொன்னதுக்கு தாங்க்ஸ்-பா ! நான் இன்னும் ட்ரெஸ் மாத்திக்கல..நீங்க சொல்லிட்டீங்க...இனிமே...இந்த ட்ரெஸ்-லயே இன்னிக்கு இருந்திடறேன்...!

தந்தை: டேய் ! வெயிலுக்கும் அதுக்கும் ரொம்ப ஸ்மெல் ஆகும்டா..!

முத்து: அப்போ எனக்கு ஃபாரினி செண்ட் வாங்கிக் கொடு...!

தந்தை: செண்ட் போட்டுகிட்டு போனாலும் போவ...குளிக்க மாட்ட போலிருக்கு...! எல்லாம் என் நேரம்...!

முத்து: அப்பா ! நான் உயிரோட இருக்கணுமா...வேணாமா?

தந்தை: (சலிப்புடன்) ஆமாம்..இத ஒண்ணு சொல்லி பயம் காட்டுடா...போ ! போ! எப்படியாவது போ...!

முத்து: எப்படியாவது எப்படிப்பா போகறது...இப்படித்தான் வெளியில போக முடியும்...
(சொல்லியவாரே வாசல் பக்கம் செல்கிறான்)

தந்தை: (தனக்குள்) கடவுளே! இந்த பையனுக்கு நல்ல புத்தியக் கொடு...!

(தொடரும்)

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates