.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Saturday, August 22, 2015

நாங்கள்லாம் எப்புடி ?

வராத தண்ணீருக்கு வரியும் கட்டுவோம் ! - நாங்க
     இல்லாத ரோட்டுக்குத்தான் TOLL கட்டுவோம் ! - ஏதும்
தராத அரசுக்குத்தான் TAX கட்டுவோம் !

எரியாத கரண்ட்டுக்குத் தான் BILL கட்டுவோம் !  - சீட்டே
       இல்லாத பஸ்ஸுக்குத்தான் மள்ளு கட்டுவோம் ! - ஏதும்
தெரியாத சாமியார்க்கு அள்ளிக் கொட்டுவோம் !

இலவசம்ன்னா க்யூவுக்குத்தான் சண்டை கட்டுவோம் ! - ரோட்டில்
     விழுந்தவனைத் தாண்டி வேக நடையைக் கட்டுவோம் ! - நல்லத்
தலைக் கவசம் TANK-க்குத்தான் போட்டு ஓட்டுவோம் !

கலவரம்ன்னு சாதி மத ஆளைக் கூட்டுவோம் ! - மதுவை
     வேணாமுன்னு சொல்லிகிட்டே சரக்கை ஏத்துவோம் ! - இந்த
நிலவரந்தான் மாறிடும்ன்னு நம்பி வாழறோம் !

Sunday, August 16, 2015

ஜோக்ஸ் - பாகம் - 10




கவர்ச்சி நடிகையும் பட்ஜெட்டும்

கவர்ச்சி நடிகையை புடவை கட்டி சென்டிமென்ட் சீன்ல நடிக்க வெச்சதால பட்ஜெட் அதிகமாயிடுச்சா? எப்படி?

"இதெல்லாம் நமக்கு வராது. 'டூப்' - போட்டு எடுத்துக்கங்கன்னு சொல்லிட்டாங்களே !"

"???"





முணுமுணுக்க வைக்கும் டைட்டில்

"அந்த டைரக்டரோடு எல்லா படத்தோட பேரையும் எல்லாரும்  முணுமுணுத்துகிட்டே இருப்பாங்களாமே ! அது எப்படி?"

"ஹிட்டான பழைய பாட்டோட வரிகளைத் தான் அவர் படத்துக்கு டைட்டிலா வைப்பார் !"





மீசை நடிகையும், கூந்தல் நடிகரும்

"'கூந்தல் நடிகரும், மீசை நடிகையும் பார்ட்டியில் ஜாலி'ன்னு கிசுகிசுவை மாத்தி எழுதி சொதப்பிட்டீங்களே !"

"பார்ட்டியில அவங்கள ஒன்னா பார்த்தப் போது ஒரே இருட்டா இருந்தது...அதுதான் குழப்பம்...ஹி...ஹி...!"





அனுபவம் புதுமை !

"பிகினியில நடிச்சது புது அனுபவம்ன்னு சொல்லியிருக்கீங்களே ! ஏன்?"

"ஏன்னா நான் இது வரைக்கும் இவ்ளோ ட்ரஸ் போட்டு நடிச்சதேயில்லை !."






Saturday, August 15, 2015

ஜெயித்திட வேணும் ! ஜெய் ஹிந்த் !



அறுபத்து எட்டு ஆண்டுகள் ஆச்சு சுதந்திரம் வாங்கி !
ஒருமித்து சொல்வோம் 'ஜெய் ஹிந்த்' என்று குரலினை ஓங்கி !
பெருமையாய்ச் சொல்ல சாதனை இருக்கு ! சோதனை தாண்டி !
அருமையா இன்னும் செய்திடலாம்நாம் ! தடைகளை நீக்கி

மனநிலை கொஞ்சம் மாறிட வேணும் ! நம்மவர்க் கெல்லாம் !
குணத்தின் குரங்கு இறங்கிட வேணும் ! கெடுப்போர்க் கெல்லாம் !
பணப்பேய் ஆட்டம் அடங்கிட வேணும் ! ஆள்வோர்க் கெல்லாம் !
இனநாய் வெறியும் அழிந்திட வேணும் ! வஞ்சகர்க் கெல்லாம் !

விந்தய மலையைத் தாண்டும் உயரம் ! பெருமையைச் சேர்க்கும்!
இந்திய மூளை சந்தையில் போனால்...வெற்றியை பார்க்கும் !
சுந்தர இயற்கை வளங்கள் அந் நிய...நாட்டையும் ஈர்க்கும் !
வந்தனம் செய்து கைகளை நீட்டி...நமை வர வேற்கும் !

மாற்றம் வேணும் எல்லாத் துறை யிலும் ! அணுகிடும் முறையில் !
ஏற்றம் ஒன்றே குறிக்கோள் என்றே..! நிறுத்திட வேணும் !
சீற்றம் கொண்ட காற்றாய் மாறி...வீசிட வேணும் !
தோற்றோம் என்ற பேச்சே இல்லை...ஜெயித்திட வேணும் !

Sunday, August 9, 2015

ஜோக்ஸ் - பாகம் - 9

"எங்க ஊர்ல நடுவுல ஓடற ஆத்துக்கு ரெண்டு பக்கமும் கரை இருந்தும், ஒரு பக்கம்தான் பயன்படுத்த முடியது...இன்னொரு பக்கம் ஒரே முள்ளும், கல்லுமா இருக்கு..."

"அப்ப...ஒரு பக்கம் உதவாக் கரைன்னு சொல்லுங்க !"

"!!!"





"நம்ம ஏகாம்பரத்தோட பையன் ஒருத்தன் அவுத்துவிட்ட மாடாட்டம் ஊரெல்லாம் மேஞ்சுகிட்டிருப்பானே...அவன் பேர் என்ன?"

"COW-ஷிக்"



"வணக்கம் டீச்சர் ! என் பையன்கிட்ட அப்பாவைக் கூட்டிகிட்டு வான்னு சொன்னீங்களாமே ! என்ன விஷயம்?"

"உங்க பையனுக்கு மெமரி லாஸ் இருக்கலாம். அதுக்காக, எக்ஸாமுக்கு உடம்பு எல்லாம் எழுதிகிட்டு வரக்கூடாது...!"

Saturday, August 8, 2015

முறுக்கு மணியும் மது விலக்கும் !

"யாரங்கே? என்ன சத்தம்?"

"ராஜாதி ராஜன் எமதர்மராஜனுக்கு வணக்கம். சொர்க்கத்தில் ஒரே கலவரம்...அதான் சத்தம்..."

"என்னது? சொர்க்கத்தில் கலவரமா? என்ன நடந்தது?"

"சொர்க்கத்திலே மது பானத்தை அறிமுகப்படுத்தி, சொர்க்கத்தையே நரகம் ஆக்கி விட்டதாகப் பெண்கள் பலர் போராட்டம் செய்கின்றனர் !"

இது என்ன கதை? சொர்க்கத்தில் மது பானம் எப்படி வந்தது? என்று நினைப்பவர்களுக்கு...இதோ..."நடந்தது என்ன?"





பூமியில் இறந்த அரசியல்வாதி, "முறுக்கு மணி",  எமலோக தர்பாரில் நிற்கிறான். அவனது "ரெக்கார்டை" பார்த்து அவனை நரகத்தில் தள்ளுகிறார்கள்...சில நாட்கள் கழித்து, எமதர்மன் நரகத்தை வலம் வரும் போது, அந்த அரசியவாதி, அங்கு இருந்த மற்றவர்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்த்தான்...!

"நகரத்தில் வாழ்ந்த நம்மையெல்லாம் நரகத்தில் தள்ளிவிட்டார்கள். கேட்டால், லஞ்சம் வாங்கினாய், ஊழல் செய்தாய்...கொலை செய்தாய் என்று சொல்கிறார்கள் ! கொலை செய்தால் என்ன? நரகமா? அப்படியென்றால், இவர்கள் செய்வதும் கொலைதானே? மனித வாழ்வினை பூமியில் முடிக்கிறார்களே! நீங்கள் எல்லாம் சற்று சிந்திக்க வேண்டும்...!" - கூட்டத்தில் பேரமைதி கலைந்து ஒரு சலசலப்பு...

தொடர்கிறான்..."லஞ்சம், ஊழல் பற்றியெல்லாம், நாம் இவர்களுக்கு சொல்லித் தரவேண்டும்...அப்போது தான் அதன் மூலம் எப்படி சீக்கிரம் வருமானம் கூட்டலாம் என்பது அவர்களுக்குப் புரியும்..இதறகான முயற்சிகளை என் கண்மணிகளாகிய நீங்கள், எனது தலைமையில் எடுக்க வேண்டும்..."

பேச்சினை ஒட்டுக்கேட்ட எமதர்மன், நரகத்தில் இது போல வீர உரைகளைக் கேட்டிராததால், அரசியல்வாதியின் பேச்சில் மயங்கினான்....அந்த இடத்தில் இருந்து ஆழ்ந்த யோசனையுடன் நகர்ந்தான்...சற்று நேரம் கழித்து, அவைக்காவலனை விட்டு அந்த அரசியல்வாதியை அழைத்து வரச் சொன்னான்..

கைகளைத் தூக்கி வணக்கம் சொன்னாவாறு, அரசியல்வாதி வந்தான்....

"ஹா..ஹா...முறுக்கு மணி !...நீ நன்றாகப் பேசுகிறாயே ! இதெல்லாம் எப்படி?"

"அது இருக்கட்டும்...உங்கள் ராஜ்யத்துக்கு நான் ஒரு புதிய திட்டம் சொல்கிறேன்...அறிமுகப்படுத்துங்கள்..."

"என்ன அது..?"

"நாங்கள் எல்லாம், பூமியில் இருக்கும்போது, மது அருந்தி அதிலேயே சொர்க்கத்தைப் பார்த்திருக்கிறோம்...இங்கே, சொர்க்கம் என்று ஒன்று இருக்கிறது...ஆனால், அதில் மதுபானம் இல்லையே..."

"நீ என்ன சொல்கிறாய்?"

"இந்தத் திட்டத்தின் படி மதுபானம் தயார் செய்து சொர்க்கத்திலும், நரகத்திலும் அறிமுகம் செய்யுங்கள்...உங்கள் தம்பிக்கே இதைத் தயாரித்து, விநியோகிக்கும் அனுமதி கொடுங்கள்...அப்படியே என்னையும் பார்டனர் ஆக்கிடுங்கள்...கஜானாவும் நிரம்பும்..."

எமதர்மனுக்கு இந்த ப்ரபோசல், இன்ட்ரஸ்டிங்காகப் பட்டது...சிந்தனையில் மூழ்கியபடி, லேசாகத் தலை அசைத்தான்...

"அப்ப நான் வர்ரேனுங்க..." - முறுக்கு மணி  அங்கிருந்து நகர்ந்தான்...

இதுதான் நடந்தது...

நல்லாயிருந்த "சொர்க்கம்", நரகமானது - போராட்டம் தலையெடுத்தது...


***********************************************************************************
மீண்டும் லைவ்...

தகவல் சொன்னவனிடம், எமதர்மன் சொன்னான்..."அந்த முறுக்கு மணியை அழைத்து வா...அவனிடமே இதற்கு என்ன தீர்வு என்று கேட்கிறேன்..."

சற்று நேரத்தில் முறுக்கு மணி அங்கு தள்ளாடியவாறே வந்தான்...ஸ்டடியாய் இருப்பது போல், கும்பிடு போட்டான்...

"உன் பேச்சைக் கேட்டு, மது பானம் விற்றதால், இப்போது சொர்க்கமே, நரகம் ஆகிவிட்டது...என்ன செய்யலாம்...நீயே சொல்..."

"போராட்டத்தை நிறுத்தினா...மது விலக்கு அமலாகும்ன்னு சொல்லுங்க..."

"அப்ப...என் தம்பியோட கதி?"

"அதை நான் பாத்துக்கறேன்..."

மீண்டும் யோசித்தபடியே எமதர்மன் லேசாகத் தலையசைத்தான்...சொர்க்கத்தில் மது பானம் கிடைக்காது என்று உத்தரவு பிறப்பித்தான்...வருமானம் குறைந்தது...

சில நாட்களில்...மீண்டும் கலவரம்...சத்தம்...

என்ன என்று விசாரித்தான் எமதர்மன்...

"முறுக்கு மணி, சொர்க்கத்தில் மதுக்கு அடிமை யானவர்களை ஒன்று சேர்த்து, மது விலக்கு அமல் படுத்தியதை எதிர்த்து போராட்டம் செய்கிறான் !"


"???????????"
 ----------------------------------------------------------------------------------------------------
இது முழுதும் கற்பனையே..யாரையும் புண்படுத்துவது நோக்கமல்ல...ஜஸ்ட் எல் ஓ எல்...!

Sunday, August 2, 2015

ஜோக்ஸ் - பாகம் - 8

king jokes - prasad

"Bore அடிக்கும் போதெல்லாம் எங்கள் மன்னர் போர் செய்வார் ..."

 "ஓ ! அவ்ளோ பெரிய வீரனா?"

"நீங்க வேற...அரசவையில் அமர்ந்து அக்கப்போர் செய்வார் !"




"ஏற்கனவே திருமணமான நடிகையைக் கல்யாணம் பண்ணி ராணியாக்க வேண்டாம் என்று சொன்னதை மன்னர் கேட்கவில்லை..."

"இப்போ என்னாயிற்று?"

"நடிகையிடமிருந்து டைவோர்ஸ் கேட்டு ஓலை வந்திருக்கிறது !"



"தைரியமிருந்தால் நேருக்கு நேர் போருக்கு வா....அதை விட்டுவிட்டு யானைப் படையெல்லாம் கொண்டு போருக்கு வராதேன்னு எதிரி நாட்டு மன்னருக்கு நம் மன்னர் சொல்லியிருக்காரே ! ஏன்?"

"மன்னருக்கு யானை என்றால் பயமாம் !"

"!!!!"





"உங்கள் நாட்டில் மட்டும் கப்பம் சரியாகக் கட்டிவிடுகிறார்களாமே ! எப்படி ?"

"கப்பம் கட்டத் தவறினால் ராணியாரோடு வாய்ச் சண்டை போட வேண்டும் என தண்டனை உள்ளதே !:"

"???"




"மன்னா ! நான் உங்களுடைய பெரிய்ய fan...!"

"அப்படியா ! அப்படியென்றால் என் அருகில் வந்து எனக்கு சாமரம் வீசு !"

"???"

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates