.zoomeffect img{ -webkit-transform:scale(0.8); -moz-transform:scale(0.8); -o-transform:scale(0.8); -webkit-transition-duration: 0.5s; -moz-transition-duration: 0.5s; -o-transition-duration: 0.5s; opacity: 0.7; margin: 0 10px 5px 0; } .zoomeffect img:hover{ -webkit-transform:scale(1.1); -moz-transform:scale(1.1); -o-transform:scale(1.1); opacity: 1; }

Social Icons

Sunday, January 25, 2015

தூய்மையைப் போற்றுவோம் !

சுத்தமே உணவினைப் போடும்...
  என்றொரு பழமொழி சொன்னார் !
நித்தமும் அதன்படி நடக்க...
   நினைக்கவும் மறந்தே போனார் !

வீதியின் நெரிசல் நடுவில்...
   குப்பையின் உண்டியல் இருக்கும் !
பாதிமேல் குப்பைகள் அதனை
   சுற்றிதான் பரவியேக் கிடக்கும் !

புகைவண்டி  பயணம் போவார் !
   பொழுதினைக் கழிக்கவேத் தின்பார் !
புகைஊதி சிலரும் போவார் !
   குப்பையை வண்டியில் விடுவார் !

இதம்தரும் காற்றைத் தேடி...
   கடற்கரை பக்கம் போவார் !
தடம்பதி மண்ணின் அழகை..
  குப்பையால் தானே மறைப்பார் !

சாலையில் செல்லும் போது...
  எங்கிலும் உழிழ்ந்தே போவார் !
வேலைக்கு செல்வோர் எல்லாம்
  பயந்துதான் ஓரம் போவார் !

சுற்றிலும் சூழ்ந்திடும் குப்பை
   புதுப்புது நோயுண் டாக்கும் !
சுத்தமே சுகங்கள் சேர்க்கும் !
   சற்றுநாம் தெளிந்திட வேண்டும் !

குப்பையை இடுவோர் தானே
   சுத்தமும் செய்திட வேண்டும் !
தப்பினை உணரவும் வேண்டும் !
   தூய்மையைப் போற்றிட வேண்டும் !

Sunday, January 4, 2015

மானுடம் வாழ்க !

செயற்கை கோளென்ன ! சந்திரனில் காலென்ன?
   சாதிக்கப் பிறந்தவனே மனிதா !
இயற்கை விதியான 'அனைவரும் சமன்' என்ற‌
   உண்மை மறந்ததவும் ஏனோ?

அரக்கன் 'சாதி'யினை ஆளாக்கி வைத்தாயே !
   அவனுன்னை ஆள்வானே இன்று !
இரக்கம் இல்லாமல் வெறியாட்டம் ஆடிஅவன்...
      உந்தன் இனமழித்தல் நன்றோ?

மதத்தின் பெயர்சொல்லி மதம்கொண்ட யானைபோல்..
   மூர்க்க நடமாடும் மனிதா !
சகத்தில் ஒருமதமே ! 'மானுடமே' அதன்பேராம்...
    வேறு ஒன்றில்லை அறிவாய் !

இரத்தம் நிறமிங்கு ஒன்றாகும் எல்லோர்க்கும்...
     ஏற்றத் தாழ்வதிலே உண்டோ?
சத்தம் போட்டிங்கு ஒன்றாகச் சொல்லிடுவோம்..
     'வாழ்க மானுடமே' என்றே !

Shareit

 

Sample text

Sample Text

 
Blogger Templates